
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவில் தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழும் நிலையில் இங்கு வைத்து சிறுவர்கள் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது ஒரு சிறுமியும் சிறுவனும் சேர்ந்து கமல்ஹாசன் மற்றும் சிம்பு ஆடிய ஒரு பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுக்க அது இன்ஸ்டாவில் வைரலானது. இவர்கள் கோவிலில் வைத்து முகம் சுளிக்கும் வகையில் நடனமாடினர். அவர்கள் நெல்லை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.