பிரதமரின் பாதுகாப்பு குழுவான எஸ்பிஜியின் இயக்குனர் அருண்குமார் சின்ஹா காலமானார். அரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சனைக்காக இவ்வாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 1987 ஆம் ஆண்டு கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியானார். கடந்த மே 30ஆம் தேதி ஓய்வு பெறுவதற்கு ஒரு நாள் முன்பு ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.