
பெங்களூர் பந்திப்புரா புலிகள் திட்டம் 50 ஆண்டு நிரம்பியதை தொடர்ந்து கடந்த 2023 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் மைசூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார். அந்த ஓட்டலின் பில் பாக்கி 80 லட்சத்தை செலுத்த வேண்டும் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இது தொடர்பாக வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், பிரதமர் ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரும் வரும்பொழுது அவர்களை வரவேற்பது மாநில அரசினுடைய வழக்கம். ஆனால் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததன் காரணமாக இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் மாநில அரசு பங்கெடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை தீர்ப்பதற்கு மாநில அரசு ஓட்டலின் பாக்கி பில்லை கட்டுவதற்கு முடிவு செய்துள்ளது என்று கூறியிருக்கிறார்.