
தேசிய கல்வி கொள்கையில் இடம்பெற்ற மும்மொழி கல்விக்கொள்கையை ஏற்காததால் மத்திய அரசு தமிழ்நாட்டில் தரவேண்டிய 2000 கோடி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது தொடர்பாக இன்று தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய பாஜக மாநில தலைவரும் எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலின் கேரளாவுக்கு சென்றால் மலையாளத்தில் பேசுகிறார் என்றார். அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் பிரதமர் கூட தமிழில் பேசுகிறார். அவர் தமிழ்நாட்டிற்கு வந்தபோது வணக்கம் என்று தமிழில் கூறவில்லையா என்றார். அதேபோன்று தான் இதுவும் இன்று பதில் வழங்கினார்.
இதைக் கேட்டவுடன் அங்கிருந்தவர்கள் சிரித்தனர். பின்னர் இது தொடர்பாக விளக்கம் கொடுத்த முதல்வர் ஸ்டாலின் நான் மலையாளத்தில் பேசியதை தமிழில் எழுதி வைத்து தான் படித்தேன் என்று கூறினார். மேலும் முன்னதாக பாஜக புதிய தலைவர் பதவி ஏற்பு விழாவின் போது நயினார் நாகேந்திரன் தாய் மொழியான மலையாளத்தில் பேசுவதற்கு பதிலாக ஒரு நிர்வாகி ஹிந்தியில் பேசியதால் அவர் மலையாளத்தில் பேசியிருந்தால் கூட இங்குள்ளவர்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் எனவே அடுத்த முறை வரும்போது மலையாளத்தில் பேசுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.