
பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கரீனா கபூர் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில் பிரபல நடிகர் சையிப் அலிகான் பிரதமர் நரேந்திர மோடி தூங்கும் நேரம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது பிரதமர் மோடியிடம் அவர் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பிரதமர் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதாக தெரிவித்துள்ளார். அதாவது பிரதமரை சந்திப்பதற்கு சமீபத்தில் என் மனைவி கரீனா கபூருடன் சென்றிருந்தேன். அப்போதுதான் அவர் நாடாளுமன்றம் முடிந்து வெளியே வந்த நிலையில் அவரிடம் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்று கேட்டேன். அந்த சமயத்தில் பிரதமர் மோடி மிகவும் உற்சாகமாக இருந்தார். மேலும் அவர் என்னிடம் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் மட்டும்தான் தூங்குவதாக கூறினார் என்றார்.