
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருடன் 71 பேர் மத்திய மந்திரிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்நிலையில் பிரதமரின் முதன்மை செயலாளராக தற்போது மீண்டும் பி.கே மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் அமைச்சரகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான பிகே மிஸ்ரா முதல்வரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை மீண்டும் நியமிக்க அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும் அவரின் பதவிக்காலம் பிரதமரின் பதவிக்காலத்திற்கு இணையாக அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற அஜித் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.