
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறை மோடி பதவியேற்க உள்ளார். இந்திய பிரதமர் பதவிக்கு மாத சம்பளமாக 1.66 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் அடிப்படை சம்பளம் 50 ஆயிரம் ரூபாய். இதர செலவுகள் 3000 ரூபாய், நாடாளுமன்ற உதவி தொகை 45 ஆயிரம் ரூபாய், அன்றாட உதவித்தொகை 60 ஆயிரம் ரூபாய் (நாளொன்றுக்கு ரூ.2000) ஆகியவை அடங்கும். இருப்பிடம் மற்றும் போக்குவரத்து செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும். SPG பாதுகாப்பு செலவுகளை பாதுகாப்புத்துறை ஏற்றுக்கொள்ளும்.