பாஜக கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா தற்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாட்டின் பிரதமரே ஒரு திராவிடர் தான் என்று கூறினார். அதாவது நேற்று ஆளுநர் ரவி கலந்து கொண்ட டிடி தமிழ் தொலைக்காட்சி ஹிந்தி தின விழாவில் ஒலிபரப்பப்பட்ட தமிழ் தாய் வாழ்த்தில் திராவிட நல் திருநாடும் என்ற வார்த்தை விடுபட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திமுகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது எச். ராஜா திராவிடம் குறித்து தன் பேட்டியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, திராவிடத்தைப் பற்றி பேசினால் நாம் நிறைய பேசலாம். நான் ஏற்கனவே இதைப் பற்றி சொல்லியுள்ளேன். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்குமே தவிர அது இனத்தை குறிக்காது. தக்காணம் பகுதிக்கு அருகே உள்ள காடுகள் நிறைந்த பகுதி, இது 56 தேசங்களாக இருந்த நிலையில் அதில் இரு பிரிவிகளாக இருந்த நிலையில் பஞ்ச திராவிடம் எனப்படுகிறது. இதில் முதல் மாநிலமே குஜராத் தான். எனவே பிரதமர் மோடியும் ஒரு திராவிடர் தான் என்று கூறியுள்ளார். மேலும் பிரதமர் மோடியும் ஒரு திராவிடர் தான் என்று எச். ராஜா கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.