அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் அதானி குடும்ப பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் தன்னுடைய பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்துள்ளது. இதனால் அதானி குழுமத்தினுடைய பங்குகள் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இதில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இது குறித்து அமெரிக்காவின் பெரும் பணக்காரரான ஜார்ஜ் சோரோஸ் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடந்த பருவநிலை மாற்றம் மற்றும் புவிசார் அரசியல் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் அவர் பேசியதாவது “இந்தியா ஒரு ஜனநாயக நாடு தான்.

ஆனால் அதன் தலைவரான நரேந்திர மோடி ஜனநாயகமானவர் இல்லை. அவர் இஸ்லாமிய மதத்தினருக்கு எதிராக வன்முறையை தூண்டி விடுகின்றார். மேலும் இந்தியா குவாட் அமைப்பில் உறுப்பினராக உள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதிக பணத்தை ஈட்டுகின்றது. மோசடியில் ஈடுபட்ட அதானியும் மோடியும் மிக நெருங்கிய நண்பர்கள். குறிப்பாக அதானி குடும்பம் பங்குச்சந்தை மூலமாக நிதி பெற முயற்சித்தது. ஆனால் இது தோல்வி அடைந்தது. இதனால் அதானியுடைய பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது. இந்த சம்பவத்தில் மோடி மிகவும் அமைதியாக உள்ளார். ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கும் நாடாளுமன்றத்திலும் அவர் கண்டிப்பாக பதில் அளிக்க வேண்டும்.

மேலும் இந்திய அரசியலில் இது மோடியின் வலிமையை குறைக்கும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் பணக்காரரான ஜார்ஜ் சோரோஸ் வெளியிட்ட கருத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி கூறியதாவது “மோசமான செயல்கள் வெற்றி பெற வளைந்து கொடுக்கும் அரசு வேண்டுமென்று அவர் நினைக்கிறார். பிரதமர் மோடி போன்ற தலைவர்களை குறி வைக்க மில்லியன் டாலர்களை நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும் அவர் இந்திய ஜனநாயகத்தை அளித்து அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் மூலமே அரசை நடத்த வேண்டும்” என்று முயற்சிக்கிறார். வெளிநாட்டு சக்திகளை நாம் கடந்த காலத்தில் அளித்து முறியடித்துள்ளோம். மீண்டும் முறியடிப்போம்” என்று கூறியுள்ளார்.