
பிரதமர் நரேந்திர மோடி உச்சி மாநாட்டில் பங்கு பெறுவதற்காக ரஷ்யா சென்று உள்ளார். அங்கு அவர் சென்று இறங்கியதும் அவருக்கு ரஷ்ய அரசு சார்பாக பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது .இந்தியர்களும் ரஷ்யர்களும் கலந்து கொண்ட இந்த விழாவில் ஆறு வயது ரஷ்யாவை சேர்ந்த சிறுமி ஒருவர் இந்திய பாணியில் பாவாடை தாவணி அணிந்து பங்க்ரா நடனத்தில் பங்கேற்றது பலரையும் ஈர்த்தது.
அவருடைய அருகில் இருக்கும் பெண்கள் பெரியவர்களாக இருக்கும் பொழுது அவர்களுக்கு இடையே நிற்கும் இந்த சிறுமி மற்றவர்களை பார்த்தபடி அழகாக துள்ளி குதித்து நடனம் ஆடுவது மனதை கொள்ளை கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது.
#WATCH | Moscow, Russia | A young Russian girl, dressed in Indian attire, joins others in performing Bhangra. pic.twitter.com/UsQt1DRiMm
— ANI (@ANI) July 8, 2024