அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள திரைப்படம் டிராகன். இந்த படத்தில் விஜே சித்து, சினேகா, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கெளதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற 21ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவானது நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் விக்னேஷ் சிவன் மிஷ்கின் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதில் பேசிய மிஷ்கின் நடிகரும் இயக்குனருமான பிரதிப் ரங்கநாதன் குறித்து பெருமையாக பேசி உள்ளார். அதாவது, “பிரதீப் ரங்கநாதன் புரூஸ்லீயை போன்றவர். இவர் இதுவரைக்கும் ஆக்சன் படம் பண்ணவில்லை. ஒருவேளை என் இயக்கத்தில் பண்ணுவான் என்று நினைக்கிறேன். ரொம்ப நாட்களுக்கு பிறகு சினிமாவுல ஒரு இளம் ஸ்டாரை பார்க்கிறேன். யாரும் கைகொடுத்து அவரை தூக்கி விடல. எல்லாம் அவருடைய உழைப்பு தான்” என்று கூறியுள்ளார்