
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. இவர் அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் தான் அதிகமாக நடித்திருக்கிறார். பிரேம்ஜி நடிகர் மட்டுமின்றி பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். இந்நிலையில் நடிகர் பிரேம்ஜி நேற்று தன்னுடைய 44-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.
இந்த பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் பிரேம்ஜியின் சிறு வயது புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்திருந்தார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.
Happy bday da thambi @Premgiamaren love u!! Stay happy!! God bless❤️😘❤️😘 pic.twitter.com/uGncIfKMon
— venkat prabhu (@vp_offl) February 24, 2023