
பாலிவுட் சினிமாவின் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருப்பவர் ஊர்பி ஜாவேத். இவர் மிகவும் வித்தியாசமான உடைகள் அணிவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில் ஊர்பி ஜாவேத் தனக்கு நேர்ந்த ஒரு கசப்பான சம்பவத்தை பற்றி பேசியுள்ளார். அதாவது மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊர்பி ஜாவேத் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் வெளியே வந்தார். அப்போது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதையடுத்து அவர் ரசிகர்களிடமிருந்து விலகி காருக்கு சென்றார். ஆனால் காரையும் சூழ்ந்து கொண்டு ரசிகர்கள் அவரை தொட்டு பேசினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊர்பி ஜாவேத் காரின் கதவை மூட முயன்றார். பின்பு அவரது செக்யூரிட்டி கார்டு அங்கு வந்து சூழ்ந்த ரசிகர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின் ஊர்பி ஜாவேத் அங்கிருந்து கிளம்பி சென்றார். மேலும் இந்த சம்பவம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.