
அமெரிக்காவின் பழம்பெரும் கால்பந்து வீரர் ஓ.ஜே.சிம்ப்சன் (76) காலமானார். சமீபத்தில் இவருக்கு புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் , இதனால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். ஜூன் 12, 1994 ல், அவரது மனைவி நிக்கோல் பிரவுன் சிம்ப்சன் மற்றும் அவரது நண்பர் ரான் கோல்ட்மேன் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இறுதியில் இந்த இரட்டை கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.