
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்பவர் லியோனல் மெஸ்ஸி. இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில் மெஸ்ஸி வெளியே செல்லும்போதெல்லாம் அவருடன் பேசுவதற்கும் செல்பி எடுப்பதற்கும் ஏராளமான ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். அப்போது சில ரசிகர்கள் அத்துமீறும் செயல்களும் அரங்கேறி வருகிறது. இதனால் எப்போதும் மெஸ்ஸியுடன் பாதுகாவலர்கள் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அவரை நிழல் போல் பின் தொடரும் நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அதில் மெஸ்ஸியின் பாதுகாப்பாளராக இருப்பவர் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவருடைய பெயர் யாசின் சூகோ. இவர் கடற்படை வீரராக பணியாற்றியுள்ளார். இவரைப் பற்றிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இதற்கு ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒரு ரசிகர் நீங்கள் அனைவராலும் விரும்பக்கூடிய ஒருவராக இருந்தாலும் ஒரு சிலருக்கு உங்களை பிடிக்காது. இதனால் அவர்கள் உங்களை தொடுவது ஆபத்தானது. இது போன்ற காரணங்களால் தான் மெஸ்ஸி இவரைப் போன்ற ஒருவரை பாதுகாவலராக வைத்துள்ளார் என்று கூறியுள்ளார்.