
பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ராஜ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனர் எம். ராமநாதன் இன்று உடல்நல குறைவின் காரணமாக காலமானார். இவருக்கு 72 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துவிட்டார். இவர் நடிகர் சத்யராஜின் மேலாளராக பல வருடங்கள் பணிபுரிந்தவர்.

இவர் நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த நடிகன், வாத்தியார் வீட்டு பிள்ளை, திருமதி பழனிச்சாமி, நடிகன், வில்லாதி வில்லன் மற்றும் உடன்பிறப்பு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். அதன் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் விஜயகாந்த் ஹீரோவாக நடித்த தமிழ்ச்செல்வன் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்த ராமநாதன் இன்று உடல்நல குறைவின் காரணமாக மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உங்களுடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.