தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் சாருஹாசன். இவர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டு வெளியான உதிரிப்பூக்கள் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தற்போது இவருக்கு 96 வயது ஆகும் நிலையில் திடீரென இவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

அதனால் அவர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சாருஹாசனின் மகள் சுஹாசினி தனது தந்தையை மருத்துவமனையில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது அவரை கட்டி அணைத்து படி ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் சுஹாசினி “இதை விடுமுறை என்பதா? அல்லது தந்தையின் மருத்துவ நிலைக்காக அவருடன் தங்கி உள்ளேன் என்பதா? ” என்றும் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவரது மகள்களின் அன்பாலும் ஆதரவாலும் நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.