சக்கரவாக்கம், மொகலி ரெகுலு உள்ளிட்ட தெலுங்கு சீரியல்களில் தயாவாக நடித்த நடிகர் பவித்ரநாத் இன்று காலை காலமானார். இதை அவருடைய மனைவி மேக்னா சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார். அதில், “பவி.. இந்த வலியை எங்களால் விவரிக்க முடியாது.. எங்கள் வாழ்க்கையில் நீங்கள்தான் முக்கியமானவர்.. இந்தச் செய்தியைக் கேட்ட பிறகு.. அது உண்மையாக இருக்கக்கூடாது என்று நான் விரும்பினேன்.

இது பொய் என்று நம்புகிறேன். ஆனால் நீங்கள் உண்மையில் இவ்வுலகை விட்டுச் சென்றதை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. குறைந்த பட்சம் உன்னை கடைசியாக பார்க்க முடியவில்லை.. விடைபெற கூட முடியவில்லை” என பதிவிட்டுள்ளார். அவரது மறைவுக்கு சின்னத்திரை மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.