பிரபல தொலைக்காட்சி நடிகையான ஹினா கான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் தன்னுடைய instagram கணக்கில் தனக்கு மூன்றாம் நிலை மார்பக புற்றுநோய் இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஏற்கனவே சிகிச்சை தொடங்கிவிட்டது எனவும் தனக்காக பிரார்த்தனை செய்யும் படியும் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். இவர் யே ரிஷ்தா க்யா கெஹ்லதா ஹை, நாகின் 5, பிக் பாஸ் சீசன் 11, கசௌதி ஜிந்தகி கே, நாகின்-5 மற்றும் பிற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் இவர் பிரபலமடைந்தார்.