தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிலும் முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் நிலையில் சமீபத்தில் நடிகை தமன்னா நடிப்பில் அரண்மனை 4 வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் படங்கள் போக விளம்பர படங்களிலும் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகை தமன்னா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதாவது தன்னுடைய ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் நகைக்கடை  நிறுவனம் ஒன்று  தான் நடித்த விளம்பர படங்களை பயன்படுத்துவதாகவும் அதனை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் தரப்பில் தமன்னா சம்பந்தப்பட்ட விளம்பர படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதோடு அந்த கோல்ட் நிறுவனம் எங்களுடைய பழைய விளம்பரங்களை தனிநபர்கள் பயன்படுத்துவதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றும் கூறினார். மேலும் இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.