
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவரை மகராஷ்டிராவில் உள்ள அவருடைய பண்ணை வீட்டில் வைத்து கொலை செய்ய சதி நடந்ததாக தற்போது பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் கேங் திட்டம் தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது நடிகர் சல்மான்கான் அவருடைய பண்ணை வீட்டில் இருந்து வெளியே வரும்போது ஏகே 47 ரக துப்பாக்கியால் அவரைக் கொல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த சதி திட்டம் தற்போது வெளியே வரவே இது தொடர்பாக ஜாவேத் கான், வாஸ்பி கான், கௌரவ் பாட்டியா, அஜய் காஷ்யப் ஆகியோர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சல்மான் கானின் பண்ணை வீடு மற்றும் அவர் படப்பிடிப்புக்கு செல்லும் இடங்களை நோட்டுமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிழல் உலக தாதாக்களான லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் ஆகியோர்கள் சல்மான் கானை கொல்ல தயாராக இருந்த நிலையில் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்பவர்களுக்கு பெரும் தொகையை கொடுக்க தயாராக இருந்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.