தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே போன்ற பல்வேறு படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. இவருடைய சொந்த ஊர் கோவை மாவட்டம். இவர் தன் தாய் விஜயலட்சுமிவுடன் வடவள்ளி அவுத்தம் மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருடைய வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் ரூ‌.2000 ரொக்க பணம் போன்றவைகள் திருடு போனது.

இதனை விஜயலட்சுமி வீடு முழுவதும் தேடியுள்ளார். இருப்பினும் பாஸ்போர்ட் கிடைக்காததால் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வீட்டில் திருடியது பணிப்பெண் செல்வி (46) என்பது தெரியவந்தது. இவர் தன்னுடைய தோழியான சுபாஷினி என்பவருடன் சேர்ந்து திருடியுள்ளார். இவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்த நிலையில் ரூ.1500-ஐ பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்கள் பாஸ்போர்ட்டை எங்கு வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.