
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அபிநயா. இவருக்கு வாய் பேச தெரியாது. இருப்பினும் தன் திறமையின் மூலம் இதுவரை தெலுங்கு மற்றும் தமிழ் உட்பட பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் சினிமாவில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு குற்றம் 23, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ள நிலையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி நடிகை அபிநயாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது தன்னுடைய வருங்கால கணவருடன் மோதிரம் மாற்றிக் கொள்ளும் புகைப்படங்களை மட்டும் தான் அபிநயா வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் தற்போது நடிகை அபிநயா தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவருடைய வருங்கால கணவர் கார்த்திக் தொழிலதிபர். மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்று கூறப்படும் நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.