பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த தோழா படத்தில் டோர் நம்பர் ஒன்னு குத்தாட்டம் போட்டுள்ளார். அதன்பிறகு பாகுபலி திரைப்படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இயக்குனர்கள் குத்தாட்டம் என்றாலே உடனே நேராவை அழையுங்கள் என்று சொல்லும் அளவிற்கு நடனத்தில் அசத்துவார்.

இந்நிலையில் நடிகை நேராபதேகி மரணம் அடைந்து விட்டதாக ஒரு வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வந்தது. அதாவது பங்கி ஜம்பிங் செய்யும்போதுதவறி விழுந்த நடிகை நேரா இறந்து விட்டதாக ஒரு செய்தி தீயாக பரவி வந்த நிலையில் அதில் உண்மை இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது நேரா கிடையாது எனவும் அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனால் நடிகை நேராவின் ரசிகர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்.