
தமிழ் சினிமாவில் ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். அதன்பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பாண்டியன் கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடிக்கும் நடிகை ரம்யா பாண்டியன் லவல் தவான் என்பவரை காதலித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியனுக்கும் அவருடைய காதலனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக புது தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அடுத்த மாதம் 8-ம் தேதி இவர்களுக்கு ரிஷிகேசில் திருமணம் நடைபெற உள்ளதாம். இதைத்தொடர்ந்து நவம்பர் 15ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மேலும் நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம் குறித்த தகவல் வெளிவந்துள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.