தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் பாலிவுட் சினிமாவிலும் நடத்தி வருகிறார். இவர் தற்போது புஷ்பா 2, ஹிந்தியில் சிக்கந்தர், தமிழில் குபேரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நேஷனல் கிரஷ் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீப காலமாக சமூக வலைதளத்தில் ஆக்டிவாக  இல்லாமல் ராஷ்மிகா இருந்தார்.

இதற்கான காரணம் குறித்து தற்போது ராஷ்மிகா மந்தனா instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதாவது அவருக்கு விபத்து ஏற்பட்டதால் மருத்துவர் அறிவுரையின் படி ஓய்வெடுத்து வருகிறாராம். ஒரு சிறிய விபத்து தான் என்றும் தற்போது குணமடைந்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்த விபத்தின் காரணமாகத்தான் சமீப காலமாக ஆக்டிவாக இல்லாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் நடிகை ரஷ்மிகா மந்தனா விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள்.