ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் சுப்பராஜு. இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு கட்கம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அடுத்தடுத்து தெலுங்கு சினிமாவில் நல்ல பட வாய்ப்புகள் அமையவே அவர் ஒரு முன்னணி நடிகராக உயர்ந்தார். படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களில்  அவர் நடித்து வரும் நிலையில் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

இவர் பாகுபலி திரைப்படத்தில் நடிகை அனுஷ்காவுக்கு மாமாவாக குமாரவர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு தமிழ் சினிமாவில் போக்கிரி, எம் குமரன், பில்லா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 47 வயது ஆகும் நிலையில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.‌ இவர் தன்னுடைய மனைவியுடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை தற்போது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவருடைய  மனைவி குறித்த விபரம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.