இந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகியாக திகழ்பவர் உமா உதுப். இவர் கடந்த 1960 ஆம் ஆண்டு தன்னுடைய இசைப்பயணத்தை தொடங்கிய நிலையில் இன்று வரை பாடகியாக ஜொலிக்கிறார். இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இவர் ஜானி சாக்கோ என்பவரை திருமணம் செய்த நிலையில் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் ஜானி சாக்கோ நேற்று கொல்கத்தாவில் உள்ள வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். அவருக்கு வயது 78 ஆகிறது. மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.