பிரபல ரஷ்ய செல்வாக்கு மிக்க வைக்க பைக்கர், டாட்டியானா ஓசோலினா(38) காலமானார். துருக்கியில் நடந்த பைக் விபத்தில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிலாஸ் அருகே பிஎம்டபிள்யூ சூப்பர் பைக்கில் அவர் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்ட இழந்து ட்ரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் துருக்கி பைக்கர் ஒனூர் ஒபுட் விபத்தில் காயங்களுடன் உயிர்த்தப்பினார். மூன்றாவது பைக்கர் காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த நிலையில் டாட்டியானா ஓசோலினா மறைவிற்கு அவரது ரசிகர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.