மலையாள சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் சுதீர் போஸ் (53). இவர் கடந்த  2008 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான கபடி கபடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்தப் படத்தில் நடிகர் கலாபவன் மணி, முகேஷ் மற்றும் ரம்பா ஆகியோர் நடித்திருந்த நிலையில் முதல் படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இவருக்கு திருமணம் ஆகி பிரீத்தா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். இவர் திருவனந்தபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவருடைய இறுதிச்சடங்கு வருகின்ற 5-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.