தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் நகுல் நடிப்பில் தமிழில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சுனைனா தற்போது வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தமிழில் கடைசியாக லத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் நடிகை சுனைனா சமீபத்தில் லாக் என்று குறிப்பிட்டபடி ஒரு நபரின் கையைப் பிடித்தவாறு புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகை சுனைனா துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபரானா காலித் அல் அமேரி என்பவரை கரம் பிடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவருக்கு தற்போது 40 வயது ஆகிறதாம். மேலும் திருமணத்திற்காக அவர் துபாயிலிருந்து இந்தியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.