தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். குறிப்பாக நடிகர் தனுஷ் நடித்த திருசிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா பாடல், நடிகர் விஜயின் அரபிக் குத்து பாடல், ரஞ்சிதமே பாடல் போன்றவைகளுக்கு கொரியோகிராபி அமைத்துள்ளார். இவர் மீது ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு 22 வயது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் செய்தார். அதாவது கடந்த 6 வருடங்களாக பல்வேறு இடங்களில் வைத்து ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் புகார் கொடுத்த நிலையில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர் தெலுங்கு படங்களில் பணிபுரிய தடை விதிக்கப்பட்டது. தன்னுடைய கு இவர் தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் ஆவார். இந்நிலையில் ஜானி மாஸ்டருக்கு தற்போது நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதாவது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜானி மாஸ்டர் பாலியல் புகாரில் சிக்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.