தமிழ் சினிமாவில் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தின் மூலம் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஜனனி. அதன் பிறகு தெகிடி படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தமிழ் மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போது இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிவடைந்துவிட்டது.

இவர் தனியார் விமான பைலட்டாக பணிபுரியும் சாய் ரோஷன் ஷியாம் என்பவரை திருமணம் செய்ய உள்ளார். இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்களை தற்போது அவர் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அவருக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.