
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பச்சையப்பன் நகர் பகுதியில் நாகராஜ் வேலுமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு சத்தியநாராயணன் (21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை சத்யநாராயணன் நீண்ட நேரம் ஆகியும் தன் அறையில் இருந்து வெளியே வராததால் பெற்றோர் சந்தேகம் அடைந்து அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சத்யநாராயணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கத்தி கதறி கூச்சலிட்டனர். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கல்லூரியில் வேலை பார்க்கும் சில பேராசிரியர்களுக்கு சத்யநாராயணன் இறப்பதற்கு முன்பு ஒரு ஆடியோ அனுப்பியது தெரியவந்தது. அந்த ஆடியோ வெளிய இனி எப்படி நான் கல்லூரிக்கு செல்வேன். எனக்கு அன்னைக்கு அவன் போன் செய்து மிரட்டியதிலிருந்து மிகவும் பயமாக இருப்பதோடு இரவு தூங்கவே முடியவில்லை.
எனக்கு அதே ஞாபகமாக இருக்கும் நிலையில் மீண்டும் என்னை மிரட்டினால் நான் என்ன செய்வேன் என்று கதறி அழுதுள்ளார். அதாவது சில கல்லூரி மாணவர்கள் பிராங்க் என்ற பெயரில் சத்யநாராயணனுக்கு போன் செய்து கிண்டல் செய்தது தெரிய வந்தது. அதோடு அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து அவர் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிராங்க் செய்த 3 மாணவர்களும் கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாணவர் தன்னுடைய பிறந்தநாளில் இப்படி ஒரு ஆடியோவை அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.