
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்பருத்தி விளை பகுதியில் ஜான் ரோஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மத போதகர். இவர் கரும்பாறை பகுதியில் ஜெபக்கூடம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜான் ரோஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜெப கூடத்திற்கு பிரார்த்தனைக்காக சென்ற ஒரு 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு இது பற்றி வெளியே சொல்ல கூடாது எனவும் அவர் சிறுமியை மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் அதைப் பற்றி சொல்லாத நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
உடனடியாக பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதாக கூறினார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஜான் ரோசை தேடி வந்தனர். அவர் கோயம்புத்தூரில் குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பது தெரியவந்த நிலையில் அங்கு சென்ற போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி மற்றும் மகன் ஆகியோரையும் கைது செய்தனர்.