
உத்தரபிரதேச மாநிலத்தின் பல்யேல் மாவட்டத்தில் உள்ள தர்பா என்ற இடத்தில் உள்ள ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
மாவட்ட முதன்மை சுகாதார அதிகாரி வினய் குமார் சிங் அந்த மருத்துவமனையை திடீர் ஆய்வு செய்தார், அப்போது தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிரிட்ஜ்சை எதர்ச்சியாக திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தார், அதில் பீர் கேன்களுடன் தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களையும் கண்டெடுத்துள்ளார். இந்த அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்திய மாவட்ட சுகாதார அதிகாரி, பிரிட்ஜ்னில் பீர், தண்ணீர் மற்றும் சோடா பாட்டில்களை வைத்த ஊழியர் ஹரி பிரசாத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளார். தடுப்பூசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய இடத்தில் இதுபோன்ற பொருட்கள் இருந்தது மிகவும் கண்டனத்திற்குரியது. என கூறினார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சுகாதார அதிகாரி உறுதியளித்துள்ளார்.