
சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
இந்நிலையில் அவர் ராஜினாமா செய்த பிறகும் தொடர்ந்து வங்கதேசத்தில் போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. அதன் பிறகு இன்று இடைக்கால அரசு புதிய தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் ஷேக் ஹசீனா லண்டனில் குடியேற இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் இங்கிலாந்தின் குடியேற்றச் சட்டத்தின் படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது. ஆனாலும் முறையான அடைக்கலம் கோரிக்கையிட்டதால் இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும் அமெரிக்கா ஷேக் ஹசீனாவின் விசாவை ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.