
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே திருக்காஞ்சி கற்பக விநாயகர் சிட்டி அமைந்துள்ளது. இங்கு ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மீனா (36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இதில் ரமேஷ் திருக்காஞ்சி பகுதியில் ஒரு வீட்டினை வாங்கி அதனை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளார்.
இவர் அந்த வீட்டிற்கு தேவையான பொருட்களை கொத்தனாரிடம் வாங்கி கொடுத்துவிட்டு பின்னர் தன் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் அவருடைய மனைவி சமையல் செய்யாமல் இருந்ததால் ரமேஷ் பிரியாணி வாங்கிவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அவர் மதியம் ஒரு மணிக்கு கடைக்கு சென்ற நிலையில் பிற்பகல் 3 மணிக்கு தான் வீட்டிற்கு வந்துள்ளார்.
அவர் தாமதமாக வந்ததால் மீனா கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்தார். இந்நிலையில் ரமேஷ் வீட்டில் இருந்து வெளியே கிளம்பி விட்டார். இதை தொடர்ந்து அவர் மாலை வீட்டிற்கு திரும்பிய போது மீனா வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.
உடனே அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனைக்கு மீனாவை மீட்டு கொண்டு சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மேலும் இது குறித்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.