சென்னையில் கடந்த இரு தினங்களாக பெய்த கனமழையில் தூய்மை பணியாளர்கள் இரவு பகல் பாராமல் அயராது உழைத்தனர். மழயையும் பொருட்படுத்தாமல் பொருட்படுத்தாமல் தூய்மை பணியாளர்கள் சிறப்பான முறையில் வேலை பார்த்தனர். இதன் காரணமாக தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பிரியாணி விருந்து வைத்து அவர்களை வெகுவாக பாராட்டினார். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தன் கைகளால் பிரியாணி பரிமாறிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டார்.

மேலும் வெள்ள பாதிப்பு நிவாரண பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதோடு அவர்களுடன் சேர்ந்து குழுவாக முதல்வர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். மேலும் முதல்வர் ஸ்டாலின் சாப்பிடும் போது அவர் அருகில் உட்கார தயங்கிய ஒரு தூய்மை பணியாளரை முதல்வர் பக்கத்தில் உட்கார வைத்து அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியாக சாப்பிட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.