பிரேசில் நாட்டின் அதிபராக லூயிஸ் இனாசியோ லுலா‌டா சில்வா என்பவர் இருக்கிறார். இவர் வீட்டில் இருக்கும்போது எதிர்பாராத விதமாக திடீரென தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக கூறியுள்ளனர். அவருடைய உடல்நிலை மோசமாக இருக்கும் நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் அவருக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.