
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். பிரேம்ஜி வீட்டு திருமணத்தில் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டனர்.
பிரேம்ஜிக்கு திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோவை அவரது மனைவி இந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அன்பு, விசுவாசம் மற்றும் இறைவனின் பாதுகாப்போடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க தயாராக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/reel/C-aHjbhSD1Z/?igsh=MTI2M3JqYXN1OGhneQ==