ராஜஸ்தான் மாநிலம் தெளசாவில் உள்ள தனியார் பள்ளியில் யதேந்திரா என்ற மாணவன் படித்து வந்துள்ளான். இந்த மாணவன் பள்ளி முடிந்த பிறகு நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டிற்கு சென்றான். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளான். இதைக் கண்ட சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவனை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். அதோடு மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த செய்தியை பள்ளி நிர்வாகம் அவனது பெற்றோர்களுக்கு தெரிவித்தது. இந்நிலையில் மாணவனின் பெற்றோர்களுக்கு ஆறுதல் அளித்த பள்ளி நிர்வாகம் அவர்களிடம் பேசும்போது மாணவனுக்கு ஏற்கனவே இதயத்தில் ஓட்டை இருப்பதாகவும் அதற்காக சிறுவயதிலிருந்தே சிகிச்சை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் யதேந்திரன் தன்னுடைய 16 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் சந்தோஷமாக கேக் வெட்டி கொண்டாடியதோடு புகைப்படம் எடுத்து கொண்டாடிய நிலையில் மறுநாளே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.