அமெரிக்காவில் நடந்த சிறிய தனியார் விமான விபத்தில் பிரபல இந்திய வம்சாவளி மருத்துவர் ஜாய் சைனி தனது குடும்பத்தினருடன் உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட ஜாய் சைனி, அமெரிக்காவின் புகழ்பெற்ற சிறுநீரக மருத்துவராக பணியாற்றி வந்தார்.

அவரது கணவர் மைக்கேல் கிராப் நரம்பியல் நிபுணராக இருந்தார். பிட்ஸ்பர்க் பல்கலைக்கழக மருத்துவக் கல்விக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜாய் சைனி, பாஸ்டனில் உள்ள Pelvic Health & Wellness மையத்தை நிறுவி சமூகத்திற்கு சேவையாற்றி வந்தவர்.

கடந்த 12ம் தேதி, தனது கணவர், மகள், மகன் மற்றும் இரண்டு நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நியூயார்க்கின் கேட்ஸ்கில்ஸ் மலைப்பகுதிக்கு தனி விமானத்தில் சென்றிருந்த ஜாய் சைனி, விமானத்தை அவருடைய கணவர் நேரடியாக இயக்கினார்.

கொலம்பியா கவுன்டி விமான நிலையத்தை நெருங்கும் போது, விமானம் திடீரென நிலத்தில் விழுந்ததில் அதில் பயணித்த 6 பேரும் உடனே உயிரிழந்தனர். அந்த பயணத்தில் ஜாய் சைனியின் மற்றொரு மகள் அனிகா மட்டுமே செல்லவில்லை.