திருநெல்வேலியில் பிறந்து 45 நாட்களை ஆனால் குழந்தை உயிரிழந்தது. அந்த குழந்தைக்கு நேற்று தடுப்பூசி செலுத்திய நிலையில் இன்று காலை உடல் நல குறைவு ஏற்பட்டது. இதனால் பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்தியதால் தான் குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.