சென்னையில் உள்ள கொளத்தூர் ராஜமங்கலம் பகுதியில் குழந்தையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த பகுதியில் உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து 6 மாதங்களே ஆன ஒரு குழந்தையின் சடலம் அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இந்த சடலத்தை ஒரு நைட்டி போன்ற உடையில் சுற்றி குப்பைத் தொட்டியில் வீசி உள்ளனர். இதை பார்த்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆண் குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.