
அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் இலக்கு நிர்ணயத்துள்ள நிலையில் அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயத்துள்ளது.
கருணாநிதியின் பேரன் என்ற ஒரே ஒரு காரணத்தால் மட்டும்தான் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி உழைப்பால் பதவிக்கு வந்தவர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் பிறப்பால் பதவிக்கு வந்தவர். எடப்பாடி பழனிச்சாமி குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் துரோகத்தின் மொத்த உருவமாக இருக்கிறார் என்று கூறினார்.