சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஒரு நாள் போட்டி விராட் கோலிக்கு 300 வது ஒரு நாள் போட்டி ஆகும்.

இதன் மூலம் அவர் ஒரு புதிய சாதனையை படைத்துள்ள நிலையில் அந்த போட்டியை காண அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா துபாய் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தார். விராட் கோலி இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்தபோது நியூஸி வீரர் பிலிப்சின் அட்டகாசமான கேட்ச் மூலம் அவுட் ஆனார். அப்போது அனுஷ்கா சர்மா கொடுத்த ரியாக்சன் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதோ இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.