
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற பேருந்தில் ஓடி ஏறி 12-ஆம் வகுப்பு மாணவி தேர்வுக்கு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தகோட்டை பகுதியில் 12-ம் வகுப்பு மாணவி தேர்வு எழுத பேருந்திற்காக காத்திருந்தார்.
திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லும் அரசு பேருந்து வந்தது. ஆனால் அந்த பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவி அதிர்ச்சி அடைந்தார். இதனால் மாணவி பின் தொடர்ந்து ஓடி அரசு பேருந்தில் ஏறினார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பெருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி பேருந்து நிறுத்தாமல் சென்ற ஓட்டுனர் முனிராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் உறுதி அளித்துள்ளது.
View this post on Instagram