வருடம் தோறும் அமெரிக்காவில் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் 95% ஆகும் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

அதன்படி உணவு விநியோக நிறுவனங்கள் ஹோட்டல்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் கரண்டி பிளாஸ்டிக் டப்பா கத்தி போன்றவைகள் வாடிக்கையாளர்கள் கேட்காமல் கொடுக்கக் கூடாது. மீறி இது போன்ற பிளாஸ்டிக்கை விநியோகித்தால் 20 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்க இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக நகர மேயர் எரிக் ஆடம்ஸ் தெரிவித்துள்ளார்.