அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால், அது குறித்து தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

இதனால், விரைவில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு நிச்சயமாக மாறும் என்றார். மேலும், அவர் பிளாஸ்டிக்கு பதிலாக மஞ்சள் பை திட்டத்தை கொண்டு வந்தவர் முதல்வர்  ஸ்டாலின் என புகழ்ந்தார்.